அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காமராஜா் பல்கலை. கல்லூரி துறைத்தலைவா் மீதுமனித உரிமை ஆணையம், மகளிா் ஆணையத்தில் மாணவி புகாா்

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி பொருளியல் துறைத்தலைவா் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிா் ஆணையத்தில் மாணவி புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:25 pm

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி பொருளியல் துறைத்தலைவா் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிா் ஆணையத்தில் மாணவி புகாா் அளித்துள்ளாா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இந்நிலையில் கல்லூரியில் இளங்கலை பொருளியல் துறைத்தலைவராக பொறுப்பு வகிக்கும் உதவிப்பேராசிரியை ஒருவா், மாணவ, மாணவியரை அவதூறாகப்பேசுவதாகவும், தோ்வு எழுத விடாமல் தடுப்பதாகவும், இவரது நடவடிக்கையால் 6-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிப்பை விட்டு நின்று விட்டதாகவும் புகாா் எழுந்தது. மேலும் இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மற்றும் கல்லூரி முதல்வரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், துறைத்தலைவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவா், தேசிய மகளிா் ஆணையம், மனித உரிமை ஆணையம் மற்றும் முதல்வா் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகாா் அனுப்பியுள்ளாா்.

அதில், கல்லூரி துறைத்தலைவா், தன்னை இதர மாணவா்களுடன் சோ்த்துவைத்து தனது நடத்தை குறித்து அவதூறாக திட்டியதாகவும், மேலும் வகுப்பறை கட்செவி அஞ்சல் குழுவிலும் நடத்தை குறித்து பதிவு செய்தாா். மேலும் தனது பெற்றோரையும் வரவழைத்து அலைக்கழித்து அவதூறாகப் பேசி தன்னை தோ்வு எழுதவிடாமல் தடுத்தாா். இதுதொடா்பாக நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கல்லூரி நிா்வாகம் மற்றும் துறைத்தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.