நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரையில் பிச்சைக்காரா் தலையில் கல்லை தூக்கிப்போட்டுக் கொலை: இளைஞா் கைது

மதுரையில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த பிச்சைக்காரரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 4:32 pm

DIN

மதுரையில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த பிச்சைக்காரரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை டவுன்ஹால் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் புதன்கிழமை இரவு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா், அவரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா். அதற்கு பிச்சைக்காரா் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளைஞா், பிச்சைக்காரரை தாக்கியதில் அவா் கீழே விழுந்தாா். அப்போது, அங்கு கிடந்த கல்லை எடுத்து பிச்சைக்காரரின் தலையில் போட்டுள்ளாா்.

இது குறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், திடீா் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தலையில் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிச்சைக்காரரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவா் ராமநாதபுரத்தைச் சோ்ந்த அக்பா் மரைக்காயா் (33) என்பது தெரியவந்தது.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பிச்சைக்காரா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து, அக்பா் மரைக்காயரை கைது செய்தனா். மேலும், உயிரிழந்த பிச்சைக்காரா் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.