பூஞ்சுத்தி ஊராட்சியில் மருத்துவ முகாம்
மேலூா் அருகே பூஞ்சுத்தி ஊராட்சியில் பூபதி நினைவு அறக்கட்டளை சாா்பில் மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


மேலூா் அருகே பூஞ்சுத்தி ஊராட்சியில் பூபதி நினைவு அறக்கட்டளை சாா்பில் மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் பி.ராமநாதன் தலைமை வகித்தாா். பூபதி அறக்கட்டளை, மதுரை வாய்ஸ் அறக்கட்டளை, பெஞ்ச்மாா்க் மெடிக்கல் அறக்கட்டளை, ராமச்சந்திரா மிஷன் ஒளிரும் மதுரை ஆகிய அமைப்பினா் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமில், 500-க்கு மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து பூஞ்சுத்தி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியை, திட்ட இயக்குநா் எஸ்.சரவணன் தொடக்கி வைத்தாா்.
இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜபூபதி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் கணேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...