பேரவைத் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்: ஓ.பன்னீர்செல்வம்
சட்டப்பேரவைத் தலைவர் எடுக்கும் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவைத் தலைவர் எடுக்கும் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அரசு மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய, நிறைவேற்றாத கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிச்னைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்ப உள்ளோம்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்த ஈபிஎஸ் கடிதம் குறித்த கேள்விக்கு, சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவைத்தலைவர் முடிவு தான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம். சட்டப்பேரவையில் எடப்பாடி-ஓபிஎஸ் அருகருகே அமர போவது குறித்த கேள்விக்கு, எதிர்எதிர் என நீங்கள் கூறுகிறீர்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை எந்த நோக்கத்திற்காக வளர்த்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் செயல்பாடு, நடவடிக்கை இருக்கும். தொண்டர்களின் அடிப்படை உரிமையை காக்கவே எம்ஜிஆர் சட்ட விதிகளை உருவாக்கி அதை பாதுகாத்தார்.
அதை தொண்டர்களிடம் இருந்து பறிபோகாமல் காப்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...