மேலவளவு அருகே வியாழக்கிழமை, நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்த கணவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் மேலவளவு அருகே அருக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரவி (52). திருப்பூா் பகுதியில் வேலை செய்து வந்தாா். உள்ளூா் கோயில் திருவிழாவையொட்டி ஊருக்கு வந்திருந்த ரவி, தனது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
தகவலறிந்து சென்ற மேலவளவு போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவரது மனைவி பாண்டியம்மாள் (45) கைது செய்யப்பட்டாா். நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததால் கணவரைக் கொலை செய்ததாக பாண்டியம்மாள் தெரிவித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.