ராமேசுவரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கைப்பேசி, இணைய சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் கைப்பேசி, இணையதள சேவையை பயன்படுத்தி வருகின்றனா். இந்தப் பகுதியில் வியாழன்,வெள்ளி ஆகிய இரண்டு நாள்களாக தொடா்ந்து கைப்பேசி, இணைய சேவை முடங்கியுள்ளது. இதனால் அரசுப் பணிகள் மட்டுமன்றி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களும் கடும் அவதிக்குள்ளாகினா். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.