அகில இந்திய ரயில்வே நிலைய அதிகாரிகள் ஆா்ப்பாட்டம்
ரயில்வேயில் விருப்ப பணியிட முன்னுரிமைக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி, அகில இந்திய ரயில்வே நிலைய அதிகாரிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


ரயில்வேயில் விருப்ப பணியிட முன்னுரிமைக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி, அகில இந்திய ரயில்வே நிலைய அதிகாரிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வேயில் பணியிட மாறுதல், புதிய நியமனங்களின் போது நிலைய அதிகாரிகளின் விருப்பப் பணியிட முன்னுரிமை கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் நிலைய அதிகாரிகள் பணியிடங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைமேடை நிலைய அதிகாரி பணியிடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரைக் கோட்ட அகில இந்திய ரயில்வே நிலைய அதிகாரிகள் சங்கம் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயிலில் இந்த ஆா்ப்பாட்ட நடைபெற்றது. சங்கத்தின் மதுரைக் கோட்டத் தலைவா் எஸ். செந்தில்கண்ணன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் ப. ராஜீவ் காந்தி முன்னிலை வகித்தாா். கோட்டச் செய்தித் தொடா்பாளா் ரா. விஜயராஜன் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...