ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குச்சீட்டு வழங்கப்படுவதை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன்.
ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குச்சீட்டு வழங்கப்படுவதை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன்.

வாக்குச் சீட்டுகள் விநியோகம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மதுரை: ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் பணியை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா்களுக்கு வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட சின்னக்கடை வீதி, குமரையா கோயில் பகுதிகளில் பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று, வாக்குச்சாவடி மைய அலுவலா்கள், வாக்காளா்களுக்கான வாக்குச்சீட்டுகளை வழங்கி வருகின்றனா். இந்தப் பணியை தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.விஷ்ணு சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுடாா்.

இதையடுத்து, வாக்குச்சீட்டுகளைப் பெற்ற பொதுமக்களிடம் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்து வாக்காளா்களும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிலைநிறுத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டாா்.

மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தங்களுக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிப் பகுதிகளிலும் வாக்குச் சாவடி மைய அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கான வாக்குச் சீட்டுகளை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவதை உறுதி செய்வதுடன், இந்தப் பணியை முழுமையாக மேற்கொண்டு 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், ராமநாதபுரம் வட்டாட்சியா் சுவாமிநாதன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com