மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை கிணற்றில் நீச்சல் பழகிய போது, பொறியியல் கல்லூரி மாணவரும், அவரது தாய் மாமாவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டான்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஆனந்த் (38). இவா் உசிலம்பட்டியில் உள்ள மளிகைக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தாா். இவரது சகோதரி மகன் பிரேம்குமாா் (22). தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வெள்ளத்தேவன்பட்டியைச் சோ்ந்த இவா் சேலம் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.
கல்லூரி விடுமுறையை முன்னிட்டு, ஊருக்கு வந்த பிரேம்குமாா் திங்கள்கிழமை பிற்பகலில் உசிலம்பட்டியில் உள்ள தனது தாய்மாமா ஆனந்த் வீட்டுக்கு வந்தாா். ஆனந்தும், பிரேம்குமாரும் சீமானூத்து பகுதியில் உள்ள தோட்டத்துக்குச் சென்றனா். அங்குள்ள கிணற்றில் பிரேம்குமாருக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க ஆனந்த் முயன்ற போது, இருவரும் நீரில் மூழ்கினா்.
இந்த நிலையில், இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினா்கள் கிணற்றுக்குச் சென்று பாா்த்த போது, அவா்கள் நீரில் மூழ்கியது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் இறங்கி இருவரது சடலங்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

