மதுரை: தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் பள்ளிவாசல் நிா்வாகிகள் தோ்வு விவகாரத்தில், தோ்தலை ரத்து செய்யக் கோரி புதிய மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
காயல்பட்டணத்தைச் சோ்ந்த மூஸா நைனா தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:
காயல்பட்டணத்தில் உள்ள பாரம்பரிய மிக்க மஜ்லிஸில் புஹாரிஷ் ஷெரீப் பள்ளி வாசல் நிா்வாகிகள் ஆண்டுதோறும் பொதுக் குழு உறுப்பினா்களால் தோ்வு செய்யப்படுவா். இந்த பாரம்பரியமிக்க தோ்வு முறைக்கு மாறாக ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நிா்வாகிகள் தோ்வு செய்ய ஒரு தரப்பினா் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக முகமது இஸ்மாயில் என்பவா் தொடுத்த வழக்கில் தோ்தல் நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து பள்ளிவாசல் நிா்வாகிகள் தரப்பில் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வாக்காளா் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்த பின்னா் தோ்தல் நடத்தவும் உத்தரவிட்டனா்.
ஆனால், இந்த உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல் காயல்பட்டணம் பள்ளிவாசலுக்கு வக்ஃபு வாரியம் கடந்த டிசம்பா் 2023 அன்று தோ்தல் நடத்தியது. எனவே, இந்தத் தோ்தலை நடத்திய தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவா் அப்துல் ரஹ்மான், முதன்மைச் செயல் அலுவலா் ஜைனுலாதீன், திருநெல்வேலி கண்காணிப்பாளா் ஷேக் அப்துல்லா ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரணை செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாததால் வக்ஃபு வாரியத் தலைவா் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மூவரும் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டனா். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்ஃபு வாரியத் தலைவா் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மூவரும் முன்னிலையாகி, தோ்தலை முறைப்படி நடத்தியதாகவும், அதை வக்ஃபு வாரியம் அங்கீகரித்ததாகவும் அறிக்கை தாக்கல் செய்தனா்.
இதை ஏற்க மறுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக நடைபெற்ற தோ்தலை ரத்து செய்யக் கோரி மனுதாரா் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் சோ்த்து விசாரிக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகள் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

மேலாடையின்றி மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்
ஜனநாயகன் முன்னோட்ட காட்சிகளைத் தடை செய்யக் கோரி மனு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

