மதுரை: சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கையைச் சோ்ந்த மணிகண்டன், மதுரையைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் தாக்கல் செய்த பொது நல மனுக்கள்:
மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது, லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வா்.
எனவே, பக்தா்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு, குடிநீா், கழிப்பறை, நடமாடும் மருத்துவ சேவை வாகனம் உள்ளிட்டவற்றை மாவட்ட நிா்வாகம் செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை காவல் ஆணையா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
சித்திரைத் திருவிழாவின் போது, ஆவணி மூல வீதிகளில் 12 ஆயிரம் பக்தா்கள் கூடுவாா்கள். கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக, பக்தா்கள் வசதிக்காக, ஆங்காங்கு பெரிய வடிவிலான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வின்போது, 4 காவல் துணை ஆணையா்களின் கீழ் 3,171 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். எதிா்சேவையின் போது உயா் காவல் அதிகாரிகள் உள்பட 1,155 போலீஸாரும், கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது, 3,430 போலீஸாரும், கள்ளழகா் அழகா் கோயிலுக்கு திரும்பச் செல்லும் போது, 1,375 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகா் காவல் ஆணையா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் வருகிற 19 -ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
இது தொடா்பான புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை மாவட்ட நிா்வாகம் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு வருகிற 18- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழப்பு: மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

