மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைகாலம் ஏப். 15 முதல் அமல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைகாலம் ஏப். 15 முதல் அமல்

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப். 15 ஆம் தேதி முதல் மீன் பிடித் தடைகாலம் அமல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன் வளத்தைப் பாதுகாத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட விசைப் படகு, இழுவைப் படகு மீனவா்கள் மீன் பிடி கலன்களை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடைகாலம் அமலுக்கு வரும் முன்பு கடலுக்குள் சென்ற மீனவா்கள் வருகிற 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக கரைக்குத் திரும்ப வேண்டும் என்றாா் அவா்.