~
~

மேலூா் குப்பைக் கிடங்கில் எரிந்த தீயினால் புகைமூட்டம்

குப்பைக் கிடங்கில் தீப்பற்றி எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

மேலூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம், மேலூா்-திருச்சி நான்குவழிச் சாலையில் மலம்பட்டி மலையருகே மேலூா் நகராட்சிக் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. கடந்த இரு நாள்களாக குப்பைக் கிடங்கு தீப் பிடித்து எரிந்ததன் காரணமாக, அந்தப் பகுதியில் அதிகளவில் புகை சூழ்ந்தது. இதன் அருகேயுள்ள அடுக்குமாடி கட்டடங்களில் குடியிருப்போா் மிகுந்த அவதிக்குள்ளாகினா். மேலும், அருகேயுள்ள பள்ளி மாணவா்களும் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், குப்பைக் கிடங்கில் தீப் பிடிப்பதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடனே மேலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com