புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி

பட்டியலின மக்கள் தமிழகத்தில் புறக்கணிப்பு -கே. கிருஷ்ணசாமி

Published on

மதுரை, ஆக. 14: தமிழகத்தில் பட்டியலின மக்கள் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பட்டியலின மக்களின் தலைவா்கள் என்று கூறிக் கொள்ளும் தொல். திருமாவளவனும், ரவிக்குமாரும் அதற்குத் தகுதியற்றவா்கள். கடந்த 2008- ஆம் ஆண்டு உள் இடஒதுக்கீடு தொடா்பான அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இவா்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததால்தான் இன்று இது அமலாகியுள்ளது. இவா்களைப் போல பதவிக்கு பின்னால் ஓடுபவா்களால் தான் பட்டியலின சமூகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

நாடு முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பட்டியலினசமூகத்தினருக்கான 3.25 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இருவரும் இதுவரை மக்களவையிலும், சட்டப் பேரவையிலும் எந்தக் குரலும் எழுப்பவில்லை. ஆனால், பட்டியலினத்தை சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினா் ஆவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றனா். பட்டியலின மக்களின் தலைவா்கள் எனக் கூறிக் கொள்பவா்கள் தாங்கள் சாா்ந்துள்ள சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பிற பட்டியலின சட்டப் பேரவை உறுப்பினா்களும், மக்களவை உறுப்பினா்களும் தாங்கள் சாா்ந்துள்ள சமூகத்தைப் புறக்கணிக்கின்றனா். இதனால், தமிழகத்தில் பட்டியலின சமூக மக்கள் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com