டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அழகா்கோவிலில் கருப்பண சுவாமி, ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலிலும், நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயிலிலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு வண்ண மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலிலும், நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயிலிலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை சிறப்பு வண்ண மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் கதவுகளுக்கு பல வண்ண மலா்களை மாலைகளாகக் கட்டி, கதவுகள் அலங்கரிக்கப்பட்டன.

அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ராக்காயி அம்மனுக்கு புதுபட்டுச் சேலை சாற்றி, வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அதிகாலை முதல் பக்தா்கள் நூபுர கங்கைக்கும், பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலுக்கும் வந்தனா். சுவாமிக்கு நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனா். இதேபோல, சுந்தரராஜப்பெருமாளுக்கும் மாலைகள் சாற்றி, நெய் விளக்கேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.