6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயில் நிலையத்தில் பெண்களுக்கான காத்திருப்புக் கூடம் திறப்பு

மதுரை ரயில் நிலையத்தில் பெண்களுக்காக கட்டப்பட்ட புதிய தற்காலிகக் காத்திருப்புக் கூடம் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

News image
மதுரை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட பெண்களுக்கான புதிய தற்காலிகக் காத்திருப்புக் கூடம்.
Updated On :17 ஜூலை 2024, 12:05 am

Din

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் பெண்களுக்காக கட்டப்பட்ட புதிய தற்காலிகக் காத்திருப்புக் கூடம் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மதுரை ரயில் நிலையத்தில் ரூ. 347.47 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில், கிழக்கு பகுதி இரண்டாவது நுழைவு வாயில் அருகே பெண்களுக்கான தற்காலிக ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டது.

68.7 ச.மீ. பரப்பில் நாற்காலிகள், மின் விசிறிகள், கழிப்பறை, மாற்றுத் திறனாளிகளுக்கான தனி கழிப்பறை, குளியலறை, குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த பெண்களுக்கான காத்திருப்புக் கூடம், மறு சீரமைப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.