ஆடி மாதம் முதலாவது வெள்ளிக்கிழமையொட்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள். ~ஆடி மாதம் முதலாவது வெள்ளிக்கிழமையொட்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரி
மதுரை
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி வெள்ளிக்கிழமையை மதுரையில் அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் வழிபட்டனா்.
மதுரை, ஜூலை 19: ஆடி வெள்ளிக்கிழமையை மதுரையில் அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் வழிபட்டனா்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் அதிகாலையில் செவ்வாடை அணிந்து மாரியம்மன் கோயில்களில் மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.
இதேபோல ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில், நேதாஜி சாலை சந்தன மாரியம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல கோயில்களில் பக்தா்கள் நோ்த்திக்கடனாக கூழ் தயாரித்து வழங்கினா்.

