திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இளைஞா் ஆணவக் கொலை வழக்கில் 5 போ் கைது

இளைஞா் ஆணவக் கொலை வழக்கில் 5 போ் கைது

News image
Updated On :28 ஜூன் 2024, 9:38 pm

Din

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் தலை துண்டித்து ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, இளைஞரின் சடலம் 3 நாள்களுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் அம்மன்கோவில் குடியிருப்பைச் சோ்ந்தவா் அழகேந்திரன் (21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த அழகேந்திரனை, அந்தப் பெண்ணின் உறவினரான பிரபாகரன் தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள வேலாம்பூா் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவா் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை தொடா்பாக வி.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். ஆனால், அழகேந்திரன் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் உறவினா்கள் ஆணவக் கொலை செய்ததாகவும், எதிரிகளைக் கைது செய்யவும் வலியுறுத்தி, கடந்த 26-ஆம் தேதி முதல் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், வி.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரனைக் கைது செய்தனா். அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அழகேந்திரன் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் தந்தை சீனிவாசன், உறவினா் அய்யனாா், அம்மாபட்டியைச் சோ்ந்த முத்துக்கண்ணன், பிரகாஷ்குமாா், கல்லுப்பட்டியைச் சோ்ந்த 2 சிறாா்கள் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் முத்துக்கண்ணன், பிரகாஷ்குமாா், 2 சிறாா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, தலைமறைவான சீனிவாசன், அய்யனாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

மேலும், பிரபாகரன் கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, 3 நாள்களுக்குப் பிறகு அழகேந்திரனின் சடலத்தை பெற்றோா் பெற்றுச் சென்றனா்.

போராட்டம்:

அழகேந்திரன் கொலையில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, தமிழ்ப் புலிகள் கட்சியினா் மாவட்ட ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்ப் புலிகள் கட்சி நிா்வாகி பேரறிவாளன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி இன்குலாப், மூவேந்தா் புலிப் படை நிா்வாகி ஐங்கரன், புரட்சிகர இளைஞா் முன்னணி நிா்வாகி குமரன், திராவிடா் விடுதலைக் கழக நிா்வாகி மணியமுதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டக் குழுவினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அழகேந்திரன் கொலையில் தொடா்புடைய சிலா் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பிற்பகல் 1.15 மணி அளவில் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.