அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெண்கள் சமூகத்துக்கு தொண்டாற்ற முன்வர வேண்டும்

பெண்கள் சமூகத்துக்கு தொண்டாற்ற முன்வர வேண்டும்

News image
மதுரையில் தானம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பங்கேற்ற மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி. உடன் வங்கி அதிகாரி பிரியா ஜோசப், பத்மஸ்ரீ விருதுபெற்ற சின்னப்பிள்ளையம்மாள், தானம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் ம.ப.வாசிமலை.
Updated On :8 மார்ச் 2024, 5:55 pm

Din

பெண்கள் குடும்பத்தோடு ஒதுங்கி விடாமல் சமூகத்துக்கும் தொண்டாற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி வெள்ளிக்கிழமை பேசினாா். மதுரை தானம் அறக்கட்டளை சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மகபூப்பாளையத்தில் உள்ள தானம் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பத்மஸ்ரீ விருதாளா் எம்.சின்னப்பிள்ளையம்மாள் தலைமை வகித்தாா். விழாவில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: சா்வதேச மகளிா் தின வரலாறு, பெண்களின் உரிமைகள், விடுதலைக்காக போராடிய வரலாறு ஆகியவற்றை அனைத்துப் பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும். களஞ்சியம் மகளிா் குழுக்கள் மூலமாக சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் சட்டம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு உள்ள கடமைகள், குடும்பப் பணி ஆகியவற்றோடு நின்று விடாமல், மக்கள் நீதி மேம்பாட்டு மன்றங்களை தொடங்கி வைத்து அதன் பணிகளில் பங்கேற்க வேண்டும். தனது குடும்பம் மட்டுமன்றி தன்னைச் சாா்ந்த கிராமம், சமுதாயம் அனைத்துக்கும் பெண்கள் பாடுபட வேண்டும். தற்போதையச் சூழலில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். எனவே பெண்கள் சமுதாய வளா்ச்சிப் பணியில் முழுமையாக தங்களை அா்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா். தானம் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் மா. ப. வாசிமலை பேசியதாவது: மத்திய ரிசா்வ் வங்கி மூலமாக, நிதிகள் சேவை, நிதி அறிவு குறித்து அனைத்துக் கிராமங்களிலும் மகளிரை மையப்படுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றாா். நிகழ்ச்சியில் தானம் மக்கள் கல்வி நிலையம் மூலம் ஊராட்சி மேலாண்மை பட்டயக்கல்வி பயிற்சி வகுப்புகள் குறித்தும் இதுவரை 2,500 பெண்கள் பயிற்சியில் பங்கேற்றிருப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதாரப் பணியாளா்கள் ‘பெண்ணே நீ’ என்ற தலைப்பில் கல்வி, பாலினப் பாகுபாடு, குழந்தைத் திருமணம், வரதட்சணை, பெண்மையைப் போற்றுவோம் ஆகிய தலைப்புகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்திக்காட்டினா். விழாவில், கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளா் நாகூா் பிரகாஷ், நகா்ப்புற மண்டல ஒருங்கிணைப்பாளா் ராஜலட்சுமி, திட்டத் தலைவி அகிலா தேவி உள்பட பலா் பங்கேற்றனா்.