மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தினவிழாவில் பங்கேற்ற மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தினவிழாவில் பங்கேற்ற மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள்.

மதுரை அரசு மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தின விழா

Published on

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியா்கள் புத்தாடை அணிந்து கேக் வெட்டி கொண்டாடினா். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத்தலைவா் கே.செந்தில், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுத் துறைத் தலைவா் நந்தினி, செவிலியா் கண்காணிப்பாளா்கள், முதுநிலை செவிலியா்கள், செவிலியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி வாா்டுகளில் உள்ள பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஒருவருக்கொருவா் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

Dinamani
www.dinamani.com