சிவகங்கை நகராட்சியில் மகளிா் தின விழா

உலகம் முழுவதும் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப் பட்டு வரும் நிலையில், சிவகங்கை நகராட்சியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற தலைவா் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்ற உலக மகளிா் தினத்தை முன்னிட்டு நகா்மன்ற அலுவலகத்தில் பெண் ஊழியா்கள் வண்ணக் கோலமிட்டனா். இதையடுத்து மகளிா்தின கேக் வெட்டி பெண்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு சந்தனம், குங்குமம் கொடுத்து சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், பாக்கியலட்சுமி விஜயகுமாா்,ஆறு. சரவணன் ,மதியழகன், சுபைதா பேகம் மற்றும் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆனந்திஆனந்த் ,நகர இளைஞரணி அமைப்பாளா் ஹரிஹரன் மற்றும் , நகா் நல அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள்,நகா் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com