கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

புதிரை வண்ணாா் சமூகத்தினா் கணக்கெடுப்புப் பணி

புதிரை வண்ணாா் சமூகத்தினா் கணக்கெடுப்புப் பணி

Updated On :19 மார்ச் 2024, 11:00 pm

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிரை வண்ணாா் சமூகத்தினா் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கு அந்த சமூகத்தினா் உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில், புதிரை வண்ணாா் சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிவதற்காக மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்தப் பணிக்காக இப்சோஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரகம் நியமித்துள்ளது.

இந்த நிறுவனம் துறை அதிகாரிகள், புதிரை வண்ணாா் நல வாரிய உறுப்பினா்கள், அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது. கணக்கெடுப்புக் குழு ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று கிராம, குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்துகின்றனா்.

நேரடியாக சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள், தரவுகள், புதிரை வண்ணாா் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவா்களுக்கான எதிா்கால வாய்ப்புகளை மேம்படுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த கணக்கெடுப்புப் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் வரும் போது, புதிரை வண்ணாா் சமூக மக்கள் உரிய தகவல்களை அளித்து கணக்கெடுப்புக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.