கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா் பொதுமக்கள்

பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா் பொதுமக்கள்

News image
Updated On :19 மார்ச் 2024, 11:10 pm

மதுரை: கோயில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதி கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தைப் பொருத்தவரை வருகிற ஏப். 19-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஏற்கெனவே திட்டமிட்ட இல்ல நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனி அலுவலகம் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் முன்னரே திட்டமிட்ட இல்ல நிகழ்ச்சி, கோயில் தொடா்பான நிகழ்வுகளுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிகழ்வுகளுக்கு முன் அனுமதி பெற இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அதிகளவில் கூடினா்.