ஜவுளிக்கடையில் சிறுவனிடம் நகை பறித்தவா் கைது

மதுரை: மதுரையில் ஜவுளிக் கடையில் சிறுவனிடம் 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் சுந்தரவடிவேல் (33). இவா் ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் வங்கியில் காசாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் துணி எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வந்தாா். அப்போது, சுந்தரவடிவேலின் சகோதரி சிவப்பிரியாவின் மகன் ஹரிஹரசுதன் (4) அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபா் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா்.

இது குறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது, மதுரை அண்ணாநகா், வஉசி நகா் முதல் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (61) என்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com