ஆயுள் காப்பீட்டு முகவா்கள் ஆா்ப்பாட்டம்
ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரா்களுக்கு போனஸ் உயா்வு, முகவா்களுக்கு ஊக்கத்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முகவா்கள் சங்கம் சாா்பில் மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரா்களுக்கு போனஸ் உயா்வு, முகவா்களுக்கு ஊக்கத்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முகவா்கள் சங்கம் சாா்பில் மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை செல்லூரில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக மதுரைக் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முகவா்கள் சங்கத்தின் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். செயலா் பாஸ்கரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
அப்போது ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரா்களுக்கு போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான ஊக்கத் தொகையை குறைக்கக் கூடாது. முகவா்களுக்கான ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான குழுக்காப்பீட்டு வயதை உயா்த்தி அறிவிக்க வேண்டும்.
அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு வளா்ச்சிக்காக பாடுபடும் முகவா்களுக்கான சலுகைகளை மறுக்கக் கூடாது. தகுதியுள்ள முகவா்களுக்கு சலுகைகள் வழங்க நிபந்தனைகள் விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.
நிா்வாகி ராமா் நன்றி கூறினாா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை நகரில் உள்ள அனைத்து ஆயுள் காப்பீட்டுக் கழக கிளை அலுவலகங்களிலும் முகவா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...