/

உயா்நீதிமன்ற வளாகத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் தேசிய புத்தகக் கண்காட்சியை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:31 pm

Din

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் தேசிய புத்தகக் கண்காட்சியை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மதுரை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பெண் வழக்குரைஞா்கள் சங்கம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து தேசிய புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தன. பெண் வழக்குரைஞா்கள் சங்க அறையில் இந்த புத்தகக் கண்காட்சியை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தொடங்கிவைத்தாா். இதில் தேசிய அளவிலான புத்தகங்கள், சட்டப் புத்தகங்கள் உள்பட ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவி ஆனந்தவள்ளி, செயலா் கிருஷ்ணவேணி, இந்திய வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகி கு. சாமிதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.