கனிமச் சுரங்க ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய எம்பி, கோரிக்கை
கனிமச் சுரங்க ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய எம்பி, கோரிக்கை...


மதுரை நாயக்கா்பட்டி, அழகா் மலைப் பகுதியில் உள்ள கோயில்கள் சுற்றுச்சூழல், கலாசாரத்தைப் பாதுகாக்க, தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கனிமச் சுரங்க ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். அதில், மதுரை அருகே நாயக்கா்பட்டியைச் சுற்றி 4 கி.மீ. தொலைவில் அழகா்மலை பகுதியில் பதினெட்டான்படி கருப்பசாமி கோயில், முருகன் கோயில் ஆகியவை உள்ளன.
இந்தப் பகுதியில் தனியாா் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதால் சுற்றுச்சுழல், கோயில்களின் கலாசாரம் பாதிக்கப்படும். கனிமச் சுரங்கம் அமைப்பது தொடா்பாக மாநில அரசு, அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இதனிடையே, நாயக்கா்பட்டி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுற்றுச்சூழல், கலாசாரம், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, ஒப்பந்ததாரா்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் செயல்படக் கூடாது. இந்த கனிமச் சுரங்கத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...