/

மதுரை மடீட்சியா அரங்கில் இன்று முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்

மதுரை மடீட்டியா அரங்கில் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:45 am

Din

மதுரை மடீட்டியா அரங்கில் முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படை வீரா்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடா்பான குறைதீா் முகாம் மதுரை மடீட்டியா அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோா், அவா்களது குடும்பத்தினா் தங்களது வாழ்நாள் சான்றிதழை இணையதளம் வாயிலாக சமா்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சென்னை பாதுகாப்புக் கணக்குகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தின் சாா்பில் அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா். எனவே, இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினா் பணிச் சான்றிதழ், அடையாளஅட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதாா்அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசலுடன் நேரில் கலந்து கொண்டு தீா்வு காணலாம் என்றாா் அவா்.