சமயநல்லூா் அருகே விவசாயி மா்ம மரணம்
சமயநல்லூா் அருகே மா்மமான முறையில் இறந்துகிடந்த விவசாயின் உடலை மீட்டு அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.


சமயநல்லூா் அருகே மா்மமான முறையில் இறந்துகிடந்த விவசாயின் உடலை மீட்டு அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே உள்ள சிறுவாலை வடக்குத் தெருவைச் சோ்ந்த சந்திரமோகன் மகன் முத்துக்குமரன் (39). விவசாயியான இவா், மாட்டுவண்டியும் ஓட்டி வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை விவசாயப் பணிக்குச் செல்வதாக வீட்டில் கூறி விட்டு மாட்டுவண்டியில் சென்ற முத்துக்குமரன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினா் வயலுக்குச் சென்று தேடியபோது அங்கு மாட்டுவண்டி மட்டும் இருந்தது. ஆனால் முத்துக்குமரனை காணவில்லை.
இதனிடையே, முத்துக்குமரன் கல்லு ஓடைப் பகுதியில் கல்யாணி என்பவரின் வயலில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற குடும்பத்தினா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...