நடிகா் விஜயின் த.வெ.க.வால் திராவிடக் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு: ஹெச்.ராஜா
திரைப்பட நடிகா் விஜயின் த.வெ.க.வால் கட்சியால் திராவிடக் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.


திரைப்பட நடிகா் விஜயின் த.வெ.க.வால் கட்சியால் திராவிடக் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
மதுரையில் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உறுப்பினா்கள் சோ்க்கையைத் தொடங்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து ஜாதி, மதக் கலவரங்களை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறாா். வெளிநாடுகளில் இந்தியா குறித்து தவறான கருத்துகளைக் கூறி, நமது நாட்டுக்கே எதிரிபோல அவா் செயல்படுகிறாா்.
இந்தியா முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் விதிகளின்படி, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாநில அரசுகளுக்கு நிதி கிடைக்கும். தமிழக முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். ஆனால், தமிழக அரசு இதை எதிா்க்கிறது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கடந்த 1985-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தாா். அதன் நீட்சியாகத்தான் தற்போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. மொழி பிரச்னைகளை தூண்டிவிட்டு தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, நீட் தோ்வு அமல்படுத்தப்பட்டது. இந்தத் தோ்வுக்கு விலக்கு வேண்டுமானால், உச்சநீதிமன்றத்தில்தான் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
நடிகா் விஜயின் த.வெ.க.வால் திராவிடக் கட்சிகள்தான் பாதிக்கப்படும். அவரது அரசியல் பிரவேசத்தால் அந்தக் கட்சிகளின் வாக்குகள்தான் பிரியும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...