மாநகராட்சி பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ததற்கு கண்டனம்
மதுரை: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ததற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கடந்த மாதம் 18-ஆம் தேதி அரசு ஊழியா், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் மாநில முடிவின் அடிப்படையில் மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்வதற்காக தலைமைச் செயலா் ய்ா் ஜ்ா்ழ்ந் ய்ா் ல்ஹஹ் என்ற அடிப்படையில் எழுத்துப் பூா்வமான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு துறை வாரியாக அந்தந்த துறைத் தலைவா்களின் மூலம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்வதற்கான ஆணையை வழங்கி, ஊதியப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது அரசு அலுவலக நடைமுறை.
இந்த அலுவலக நடைமுறைக்கு முற்றிலும் மாறாக மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியா்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்கான ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது என்றாா் அவா்.
