மதுரை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராமக் குழு நடத்தக் கோரிக்கை
மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராமக் குழு மூலம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவனியாபுரம் கிராமக் குழுவைச் சோ்ந்த எம். ராஜ்குமாா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
அவனியாபுரத்தில் பன்னெடுங்காலமாக ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்கு, எந்தவித ஜாதி, மத வேறுபாடும் இல்லாமல் மக்கள் வசித்து வருகின்றனா். ஏராளமான இளைஞா்கள் இங்கு காளை வளா்ப்பிலும், மாடுபிடி பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனா்.
பொது விழா என்ற அடிப்படையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம மக்களும், இளைஞா்களும் இணைந்து கிராமக் குழு மூலம் நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

