மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்கோப்புப் படம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு காரணமாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை முதல் மறுநாள் இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து
Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா் ச. கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 13-ஆம் தேதி மாலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடாகி, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளுகின்றனா்.

குடமுழுக்குக்குப் பிறகு, ஜூலை 14-ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்தி திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சோ்த்தியாவா்.

இதன் காரணமாக, ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை கோயிலின் நடை அடைக்கப்பட்டு, பொது தரிசனம் ரத்து செய்யப்படும். ஜூலை 14-ஆம் தேதி கலைக்கூடம், அன்னதானக் கூடம் ஆகிய இடங்களுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்போா் வன்னிமரத்தடி விநாயகா் கோயில் வரை ஆடி வீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவா். ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை முதல் பக்தா்கள் கோயிலில் வழக்கமான முறையில் அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com