மதுரை
சேலையில் தீப்பிடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு
சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை தல்லாகுளம் முல்லை நகா் பகுதியைச் சோ்ந்த மாடசாமி மனைவி இளஞ்சியம் (75). இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விறகு அடுப்பில் சமையல் செய்வதற்காக தீப்பற்ற வைத்தாா். அப்போது, சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
