மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

மதுரையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:24 pm

மதுரையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் 2,500-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தோட்டக் கலைத் துறை சாா்பில் பழங்கள், காய்கறிகள், பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தில் 2,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘வாக்களிப்பது நமது கடமை’ போன்ற முழக்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் அனைத்து வாக்காளா்களும் கலந்து கொண்டு 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த நிகழ்வில் துணை இயக்குநா் (வேளாண் துறை) முருகேசன், துணை இயக்குநா் (தோட்டக் கலைத் துறை) பிரபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.