15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஓய்வு பெற்ற தமிழாசிரியா்களுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 9 தமிழாசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியா்கள் உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 12:39 am IST

மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 9 தமிழாசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா்கள் சண்முகவேல், முனியாண்டி, நாகராஜன், முன்னாள் உதவித் தலைமையாசிரியா் ரகமத்துல்லா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியா்கள் அருளரசி, மீனா, ஆதிசக்தி, சுப்புராஜ், தமிழ்மணி, காசிமாயன், நஜிமா, மதலேன் மேரி, வாசுகி ஆகியோருக்கு கேடயம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக, நல்லாசிரியா் விருது பெற்ற மகேந்திரபாபு வரவேற்றாா். மணி மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினாா்.