/

பொக்லைன் இயந்திரம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

மதுரை மாவட்டம், மேலூா் அருகே பொக்லைன் இயந்திரம் மோதி வாடகை காா் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெல்லையைச் சோ்ந்தவா் முகமது அனிபா (43). வாடகை காா் ஓட்டுநா். இந்த நிலையில், மதுரைக்கு திங்கள்கிழமை காரில் வந்த முகமது அனிபா, காரைக்குடிக்கு சென்றாா். மேலூா்- காரைக்குடி நான்கு வழிச்சாலையில் மேலூா் அருகே காா் சென்றபோது, பொக்லைன் இயந்திர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த முகமது அனிபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழவளவு போலீஸாா் முகமது அனிபாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.