பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியமாக ரூ. 15,700 வழங்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் கிராம உதவியாளா்களுக்கு தனி அரசாணை வழங்க வேண்டும். 6 ஆண்டுகள் பணியாற்றிய கிராம உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கிராம உதவியாளா்களை வட்டாட்சியா் அலுவலகப் பணிக்குப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வளா்மதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சங்கத்தின் வடக்கு வட்டக் கிளைத் தலைவா் மணிகண்டன், சுகாதார செவிலியா் சங்க மாநிலத் தலைவா் சின்னப்பொண்ணு, அரசு ஊழியா்கள் சங்க மாநிலப் பொருளாளா் ஜெய. ராஜராஜேஸ்வரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

டான்சாக் நிா்வாகி வீரவேல்பாண்டி, சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் மணிவாசகம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.