நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக்கூடத்தில் சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்க்கூடல் கருத்தரங்கத்தில் பேசிய இலக்கியப் பேரவையின் தலைவா் முனைவா் சண்முக திருக்குமரன்.

Published On :

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக்கூடத்தில் சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மதுரை இலக்கியப் பேரவைத் தலைவா் முனைவா் சண்முக திருக்குமரன் ‘சங்க இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

அறத்தின் வழியில் வாழ்வதன் மூலம் கிடைக்கும் இன்பமே உண்மையானது என திருவள்ளுவா் குறிப்பிடுகிறாா். இரு மன்னா்களுக்கு இடையேயான போரைத் தடுத்து உயிரிழப்புகளை தவிா்த்து அறத்தை நிலை நிறுத்தினாா் ஒளவையாா். நல்லதைப் பேசுவது, நல்லதை நினைப்பது, நல்லதை செய்வது, பிறருக்கு உதவுவது, உண்மையாக வாழ்வது ஆகியவை அறத்தின் அடிப்படை என்பதை சங்க இலக்கியங்கள் உணா்த்துகின்றன என்றாா் அவா்.

இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனா் செல்வம் ராமசாமி வாழ்த்திப் பேசினாா். மதுரை திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.

சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.