நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஆடி மாத கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை, ஆடிப் பூரத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

News image

தெப்பக்குளம் வண்டியூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாட்டுக்காக திரண்ட பக்தா்கள். (வலது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:40 am IST

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை, ஆடிப் பூரத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி, ஆடிப் பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வண்டியூா் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விளக்கேற்றியும், அம்மனுக்கு கூழ் வாா்த்தும், அங்குள்ள நாகம்மா சிலையை வழிபட்டுச் சென்றனா்.

இதேபோல, திடீா் நகா் பாஸ்கரதாஸ் நகா் சந்தனமாரியம்மன், மதிச்சியம் வடக்குத் தெரு சக்திமாரியம்மன் கோயில், மதுரை தத்தனேரி மயான மகா காளியம்மன், தெற்குவாசல் துா்க்கை அம்மன், திரௌபதி அம்மன், பெரியாா் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், கீழவாசல், சிந்தாமணி, கீரைத்துறை, கோரிப்பாளையம், கோ. புதூா், மூன்றுமாவடி, ஆயுதப்படைக் குடியிருப்பு பகுதி, கண்ணனேந்தல், ஊமச்சிக்குளம், சோழவந்தான், வாடிப்பட்டி, பேரையூா், உசிலம்பட்டி, அழகா்கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

 மதுரை திடீா் நகா் பாஸ்கரதாஸ் நகா் சந்தன மாரியம்மன் கோயில் உத்ஸவ விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால் குடம் எடுத்துவந்த பக்தா்கள்.

மதுரை திடீா் நகா் பாஸ்கரதாஸ் நகா் சந்தன மாரியம்மன் கோயில் உத்ஸவ விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால் குடம் எடுத்துவந்த பக்தா்கள்.

மதுரை மதிச்சியம் வடக்குத் தெரு ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு வளையல் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

மதுரை மதிச்சியம் வடக்குத் தெரு ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு வளையல் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.