தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவிருப்பதையொட்டி, இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா். உடன் உதவி ஆணையா் குமரன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக் உள்ளிட்டோா்.

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவிருப்பதையொட்டி, இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த குடமுழுக்கு விழாவுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவில் பக்தா்கள் வருவா். எனவே இவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மாநகராட்சி மூலம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகள், கோயிலைச் சுற்றியுள்ள நடைபாதைகள், குடிநீா், தெரு விளக்குகள், பக்தா்கள் வரும் பாதைகள், மழைநீா் செல்லும் வடிகால்கள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய தேவையான பணியாளா்களை நியமிக்குமாறும், நடைபாதைகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்குமாறும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் சோ்ந்ததும் அவற்றை உடனடியாக மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையா் குமரன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், உதவிச் செயற்பொறியாளா் முத்து, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.