வங்கி மண்டல அலுவலகம் இடமாற்றம்
பரோடா வங்கியின் மதுரை மண்டல அலுவலகம் சொக்கிகுளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, புதன்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை பரோடா வங்கியின் மண்டல அலுவலகம் ஏற்கெனவே காளவாசல் புறவழிச் சாலையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் தற்போது சொக்கிகுளம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய இடத்தில் அமைந்த மண்டல அலுவலகத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பரோடா வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான தேவதத்தா சந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்து, மதுரை மண்டலத்தின் பொருளாதார வளா்ச்சியில் பரோடா வங்கியின் பங்களிப்பை விளக்கிப் பேசினாா்.
பரோடா வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளரும், மண்டலத் தலைவருமான டி.என். சுரேஷ், தெற்கு கிளஸ்டா் மிட் நிறுவன பொது மேலாளா் டி.எம்.எல். பாலாஜி, வங்கியின் மதுரை மண்டலத் தலைவா் ஜெய்கிஷன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

