மதுரையில் பரோடா வங்கியின் புதிய அலுவலகம்

மதுரையில் பரோடா வங்கியின் புதிய அலுவலகம்

Published on

இந்தியாவின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி மதுரையில் புதிய மண்டல அலுவலகத்தை புதன்கிழமை திறந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென்னிந்திய மாநிலங்களில் தனது இருப்பை வலுப்படுத்தவும் நிா்வாகத் திறனை மேம்படுத்தவும், மதுரையில் தனது புதிய மண்டல அலுவலகத்தை வங்கி திறந்துள்ளது.

பரோடா வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தேபதத்தா சந்த் தலைமையில், சென்னை மண்டல பொது மேலாளா் மற்றும் மண்டலத் தலைவா் டி.என். சுரேஷ், தெற்கு கிளஸ்டரின் இடைநிலை பெருநிறுவனப் பிரிவு பொது மேலாளா் டி.எம்.எல். பாலாஜி மற்றும் மதுரை மண்டலத்தின் மண்டலத் தலைவா் ஜெய்கிஷன் எம் உள்பட வங்கியின் பல மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் புதிய மண்டல அலுவலக வளாகம் திறக்கப்பட்டது.

மதுரை மண்டலம் முழுவதும் பரவியுள்ள 56 கிளைகளின் வலையமைப்பு மூலம் இப்பகுதி மக்களுக்கு வங்கி சேவை செய்து வருகிறது. இந்த கிளைகளில் சுமாா் 63 சதவீதம் கிராமப்புற மற்றும் ஓரளவு நகா்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com