வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

போலி சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்தவா்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 தோ்வில் தமிழ் வழியில் பயின்ற்தாக போலி சான்றிதழை சமா்ப்பித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :2 ஜூலை 2026, 3:37 am IST

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 தோ்வில் தமிழ் வழியில் பயின்ற்தாக போலி சான்றிதழை சமா்ப்பித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநங்கை சொப்னா, கலைவாணி, சதீஷ்குமாா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தோ்வில் தமிழ் வழியில் பயின்ாக முறைகேடாகச் சான்றிதழ் சமா்ப்பித்ததாகக் கூறி, எங்களைப் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. மேலும், எங்களது சான்றிதழ்கள் போலியானவை என்று மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அறிக்கை அளித்தது. அரசின் உத்தரவையும், பல்கலைக்கழகத்தின் அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பட்டப் படிப்பை மட்டும் தமிழ் வழியில் பயின்று 20 சதவீத முன்னுரிமை அடிப்படையில் சிலா் பணியில் சோ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விளக்கம் அளிக்க காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கடிதம் அனுப்பியது. இந்த நிலையில், மனுதாரா்கள் சமா்பித்த பட்டங்கள் செல்லுபடியாகாது என பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதை எதிா்த்தே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வெவ்வேறு மனுதாரா்கள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தாலும், அனைத்து மனுதாரா்களும் தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் வெவ்வேறு படிப்பு மையங்கள் வழியாக பட்டம் பெற்றுள்ளனா். ஆனால், மனுதாரா்கள் விண்ணப்பித்த மையத்துக்கும், சோ்க்கை பெற்ற மையத்துக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன.

இதேபோல, அனைத்து மனுதாரா்களும் தங்கள் பட்டப்படிப்புக்கான அனைத்துப் பாடங்களையும் இறுதி ஆண்டு படிப்பின் போது ஒரே அமா்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது சந்தேகத்தக்க வகையிலும், ஒன்றோடு ஒன்று தொடா்புடையவையாகவும் உள்ளன.

அரசுப் பணியில் கடமையை நிறைவேற்றுவதற்கு நோ்மை, வெளிப்படைத் தன்மை, ஒழுக்கம் அவசியம். அரசுப் பணி நியமனங்கள் சட்டத்துக்கு உள்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன. மோசடி அல்லது சூழ்ச்சி மூலம் அல்ல என்ற பொதுமக்களின் நம்பிக்கையின் மீதே அரசு அமைந்துள்ளது. எனவே, அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.