பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காளையன் உருவ இலச்சினையால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை தெப்பக்குளம்-அனுப்பானடி சாலையில் உள்ள காளையன் உருவ இலச்சினையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.

News image

மதுரை தெப்பக்குளம்-அனுப்பானடி சாலையில் பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ள காளையன் உருவ இலச்சினை.

Updated On :9 ஜூலை 2026, 5:16 am IST

மதுரை தெப்பக்குளம்-அனுப்பானடி சாலையில் உள்ள காளையன் உருவ இலச்சினையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.

மதுரையில் 14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி கடந்த ஆண்டு நவ. 28-ஆம் தேதி தொடங்கி டிச. 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் மதுரை மாநகரில் ஆங்காங்கே காளையன் உருவ இலச்சினை வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஹாக்கிப் போட்டிகள் நிறைவடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பல இடங்களில் வைக்கப்பட்ட இந்த இலச்சினை அகற்றப்படாமல் உள்ளது.

குறிப்பாக, தெப்பக்குளம்-அனுப்பானடி செல்லும் சாலையில் வைக்கப்பட்ட இலச்சினையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தெப்பக்குளம், அனுப்பானடி பகுதியில் பள்ளி, கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் மாணவ, மாணவிகள் இந்தச் சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் குறுகிய இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு ஹாக்கிப் போட்டிக்கான காளையன் உருவ இலச்சினை சாலையில் இருப்பது முக்கியக் காரணமாகும்.

எனவே, தெப்பக்குளம்-அனுப்பானடி சாலையில் உள்ள காளையன் உருவ இலச்சினையை அகற்றவும், காலை, மாலை வேளைகளில் கூடுதல் போக்குவரத்துக் காவலா்களை பணியமா்த்தி போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.