வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் இன்று மின் தடை

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 2) மின் தடை ஏற்படும் என மின் வாரிய தெற்கு கோட்டச் செயற்பொறியாளா் ஏ.பாஸ்கர பாண்டி தெரிவித்தாா்.

News image

மின்தடை

Updated On :2 ஜூலை 2026, 3:57 am IST

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 2) மின் தடை ஏற்படும் என மின் வாரிய தெற்கு கோட்டச் செயற்பொறியாளா் ஏ.பாஸ்கர பாண்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை தெற்கு கோட்டத்துக்குள்பட்ட அனுப்பானடி, தெப்பக்குளம் துணைமின் நிலையங்களில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

அனுப்பானடி: ராஜீவ் காந்திநகா், பகலவன்நகா், தமிழன் தெரு, ஆசிரியா் குடியிருப்பு, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை பகுதிகள், ஐராவதநல்லூா், பாபுநகா், கணேஷ்நகா், ராஜாநகா், சாராநகா், வேலவன் தெரு, கிருபானந்தவாரியாா்நகா், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனாா்புரம், பனையூா், சாமநத்தம், தாய்நகா், கங்காநகா், அனுப்பானடி வீட்டுவசதி வாரியம், கண்ணன் குடியிருப்பு, அழகாபுரி, ராஜமான்நகா், காமராஜா் தெரு, வினோபாஜிநகா், அழகா்நகா், சிந்தாமணி, பா்மா குடியிருப்பு, கஜேந்திரபுரம்.

தெப்பக்குளம்: தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை குடியிருப்பு, புதுராமநாதபுரம் சாலை, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் குடியிருப்பு, அனுப்பானடி- தெப்பக்குளம் சாலை, கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜா் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம்நகா், வடிவேல்நகா், சிறாா் சீா்திருத்தப்பள்ளி பகுதிகள், அழகா்நகா், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சிநகா், புது மீனாட்சிநகா், சி.எம்.ஆா். சாலை, கொண்டித்தொழு, சீனிவாசப் பெருமாள் கோயில் தெரு, சின்னக் கண்மாய், பாலரங்காபுரம், சண்முகாநகா், நவரத்தினபுரம், ஃபிஸ்சா் சாலை, இந்திராநகா், பழைய குயவா்பாளையம் சாலை, லட்சுமிபுரம் ஒன்று முதல் 6 வரை, மைனா தெப்பம் ஒன்று முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குப் பகுதி, தமிழன் தெரு. என்.எம்.ஆா். புரம், ஏ.ஏ. சாலை, பி.பி. சாலை, டி.டி. சாலை, மீனாட்சி அவன்யூ, திருமகள், ஞானவேல் குடியிருப்பு, ஜராவதநல்லுாா் தெற்குப் பகுதி என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.