மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

குடியிருப்பு அருகே மதுக் கடை: தூத்துக்குடி ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

விளாத்திகுளம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் செயல்படும் மதுக் கடையை அகற்றக் கோரிய மனு தொடா்பாக எட்டு வாரங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 5:33 am IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் செயல்படும் மதுக் கடையை அகற்றக் கோரிய மனு தொடா்பாக எட்டு வாரங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த மகாலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

விளாத்திகுளம் அருகேயுள்ள புதூா் நெசவாளா் தெரு, புது குடியிருப்புப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு மிக அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையால், அவா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.

மேலும், பெண்கள், மாணவா்கள், முதியவா்கள் அச்சத்துடன் இந்தப் பகுதியைக் கடந்து சென்று வருகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் செயல்படும் மதுக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து, எட்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.