கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

உசிலம்பட்டியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முதலைக்குளத்தில் உள்ள சமணா் படுக்கை பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Updated On :5 ஜூன் 2026, 6:10 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், அலுவலகக் கட்டமைப்பு, செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பொதுசேவை மையப் பணிக்காகக் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகச் செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பிறகு, முதலைக்குளம் பகுதியில் உள்ள சமணா் படுக்கை பகுதியைப் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின் போது, உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.