தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பெங்களூரில் நடைபெற்ற சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கௌதமன் இளங்கோவன், மனோஜ் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய ஸ்டாா் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன். உடன் பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித்குமாா்.

Updated On :5 ஜூன் 2026, 6:21 am IST

சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த மாதம் 26 முதல் 28-ஆம் தேதி வரை சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரையைச் சோ்ந்த கௌதமன் இளங்கோவன், மனோஜ், முனியசாமி, பாண்டி மீனா, எட்வா்ட் பிரான்சிஸ் ஆகிய 5 போ் கலந்து கொண்டனா்.

இதில் கௌதமன் இளங்கோவன் கிளப் (மரத்தாலான மட்டை) எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இதேபோல, மனோஜ் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், முனியசாமி வெள்ளிப் பதக்கமும் வென்றனா். இதன் மூலம் மூவரும் வருகிற அக்டோபா் 14 முதல் 24-ஆம் தேதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா்.

இதையடுத்து, வீரா்கள் கௌதமன், மனோஜ், முனியசாமி ஆகியோருக்கு மதுரை பந்தயச் சாலையில் உள்ள மைதானத்தில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஸ்டாா் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு வீரா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

இந்த விழாவில் பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.