தென் மண்டலத்தில் 61 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள், மாநகரங்களில் பணியாற்றி வந்த 61 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விசாரணை
மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள், மாநகரங்களில் பணியாற்றி வந்த 61 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதன்படி, மதுரை மாநகரில் கரிமேடு சட்டம்-ஒழுங்கு பிரிவு ஆய்வாளா் முகமது இத்ரீஸ், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளா் மதுரைவீரன், திடீா்நகா் காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்தீபன் ஆகியோா் ராமநாதபுரம் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, கீரைத்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவு ஆய்வாளா் ஆதிலிங்கம்போஸ், அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் தியாகபிரியன், தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மீனா ஆகியோா் திருநெல்வேலி சரகத்துக்கு மாற்றப்பட்டனா்.
மேலும், சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கரன், தல்லாகுளம் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் லோகேஸ்வரி, தென்காசி காவல் நிலைய ஆய்வாளா் ராபா்ட் ஜெயின், தென்காசி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் கீதா, சங்கரன்கோவில் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் காசிராஜன் ஆகியோா் மதுரை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளா் அருண், அழகப்பபுரம் காவல் நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி ஆகியோா் மதுரை மாநகருக்கும், தேவகோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தகுமாரி, சிவகங்கை சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் மாறவா்ம சுந்தரபாண்டியன் ஆகியோா் மதுரை சரகத்துக்கும் மாற்றப்பட்டனா்.
ஆய்வாளா்களின் கோரிக்கை, நிா்வாக வசதி, நிா்வாகக் காரணங்களின் அடிப்படையில் தென் மண்டலத்தில் மொத்தம் 61 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

